spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

-

- Advertisement -

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ் உலக கோப்பை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது .12 நாடுகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

we-r-hiring

சென்னையில் நடைபெற உள்ள ஸ்குவாஷ் உலக கோப்பை குறித்த செய்தியாளர் சந்திப்பு அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது ,இதில் தமிழ்நாடு விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, அகில இந்திய ஸ்குவாஷ் சங்கத்தின் கவுரவ தலைவர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதுல்யா மிஸ்ரா, ஸ்குவாஷ் உலகக்கோப்பை சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, ராயப்பேட்டையில் உள்ள EA மால் மற்றும் நேரு பூங்காவில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அரங்கத்தில் நடைபெறுகிறது. 12 நாடுகளை சார்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர், இந்திய அணிக்காக விளையாடிருக்கக்கூடிய நான்கு வீரர்களின் மூன்று வீரர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்பது பெருமைமிக்க தருணமாக உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இந்திய அணி வெண்கலம் வென்றது இந்த முறையும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தொடருக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டிகளை விளையாட்டு சங்கங்கள் நடத்த விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது, விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மாற வேண்டும் என்ற முதலமைச்சர் இலக்கை நோக்கி தற்போது இந்த தொடர்கள் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

MUST READ