Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்புற்றுநோய் செல்கள் வளரும் அபாயத்தை குறைக்கும் திரிபலா சூரணம்!

புற்றுநோய் செல்கள் வளரும் அபாயத்தை குறைக்கும் திரிபலா சூரணம்!

-

- Advertisement -

திரிபலா சூரணத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.புற்றுநோய் செல்கள் வளரும் அபாயத்தை குறைக்கும் திரிபலா சூரணம்!

திரிபலா சூரணம் என்பது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அந்த வகையில் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தோல் ஆரோக்கியத்திற்கும், கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது தவிர உடல் எடையை குறைக்கவும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

we-r-hiring

அதிலும் இந்த திரிபலா சூரணம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் உடையது. அதாவது இது புற்றுநோய் செல்கள் வளரும் அபாயத்தை குறைக்குமாம். மேலும் உடல் வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்றும் சமன் இல்லாததால் வரும் பிரச்சினைகளை சரி செய்யவும் உதவும் என்று சொல்லப்படுகிறது.புற்றுநோய் செல்கள் வளரும் அபாயத்தை குறைக்கும் திரிபலா சூரணம்!

எனவே திரிபலா சூரணத்தை பொடியாக்கி காலை அல்லது இரவு உணவிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனை தேனுடன் கலந்தும் பருகலாம். ஆனால் ஒரு நாளைக்கு அரை ஸ்பூன் முதல் ஒரு ஸ்பூன் வரை எடுத்துக் கொள்வது நல்லது. இதைப் பின்பற்றுவதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

குறிப்பு:

குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல் எடை குறைவாக உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு இருப்பவர்கள், நீர்ச்சத்துக் குறைபாடு உடையவர்கள் ஆகியோர் இந்த திரிபலா சூரணம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

MUST READ