spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதி

பெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதி

-

- Advertisement -

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு,  வாழ்வில் பல பாம்புகளிடம் கடி வாங்கும் நான் பெரியார் திடல் சென்று பெரியார் எனும் மருந்தை தடவி போக்கி கொள்வேன் என ஆசிரியா் கூறுவார் என்று கூறினாா்.பெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதிதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தாா். அப்போது “கடமை கட்டுபாட்டோடு, பெரியார் இடத்தில் இருந்து நம்மை ஆசிரியர் வழி நடத்துக்கிறார். இந்தி திணிப்பாக இருந்தாலும் SIR ஆக இருந்தாலும் ஆசிரியர் தமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை முதல் ஆளாக எதிர்ப்பார். பரீட்சை செல்லும் போது ஆசிரியர் ராகு நேரத்தில் சென்று ஹால் டிக்கெட் வாங்கினால் கூட்டம் இல்லாமல் செல்லலாம் என்ற பகுத்தறிவு கொண்ட சிந்தனையாளர். வள்ளுவர்கோட்டத்தில் அறிவுத்திருவிழா என்றவுடன் பலர் வேண்டாம் என்றனர் அது இன்று வெற்றிவிழாவாக மாறி உள்ளது. 63 ஆண்டுகள் விடுதலையின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருவது உலகிலேயே ஆசிரியர் தான். மிசா சட்டத்தில் முதலமைச்சர் கைது செய்த போது, அதற்கு முன்னரே கைதாகி சிறையில் இருந்தவர் ஆசிரியர் என  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

மேலும், பெரியார் திடல் குறித்து கலைஞர் கூறுவது, “கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை நடக்கும் போது பாம்பை கொன்று கீரி எப்பொழுதும் வெல்லும். பாம்பிடம் கடி வாங்கிய கீரி அதற்கு மட்டுமே தெரிந்த மூலிகை செடியில் புரண்டு விஷத்தை போக்கும். அப்படி வாழ்வில் பல பாம்புகளிடம் கடி வாங்கும் நான் பெரியார் திடல் சென்று பெரியார் எனும் மருந்தை தடவி போக்கி கொள்வேன் என கூறுவார். கலைஞர் மட்டுமல்ல முதலமைச்சரை மட்டுமல்ல என்னையும் சில நேரங்களில் நிறைய  பாசிச பாம்புகள்  சீண்டிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கும் பெரியார் எனும் மூலிகை நிச்சயம் தேவை அடிக்கடி பெரியார் திடலுக்கு   வரவேண்டிய கட்டயம் ஏற்பட்டுள்ளது என்று கூறுவாா்“ என துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து…

we-r-hiring

MUST READ