spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் பொருளாதார  வளர்ச்சியில் சந்தேகம்…IMF-ன்புதிய தகவல்…

இந்தியாவின் பொருளாதார  வளர்ச்சியில் சந்தேகம்…IMF-ன்புதிய தகவல்…

-

- Advertisement -

மோடி அரசின் பொருளாதார வளர்ச்சியை IMF (International Monetary Fund) ஏற்க மறுத்துள்ளது. உலகம் மோடியின் விளம்பர இந்தியாவை அல்ல. உண்மையான இந்தியாவை பார்க்கத் தொடங்கிவிட்டது.  இந்தியாவின் பொருளாதார  வளர்ச்சியில் சந்தேகம்…IMF-ன்புதிய தகவல்…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு பெருமிதம் கொள்கிற வேளையில், International Monetary Fund (IMF) வெளியிட்ட புதிய மதிப்பீடு நாட்டின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய கணக்கு தரவுகளுக்கு IMF தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘C’ Grade என தரம் குறைப்பை வழங்கியுள்ளது. இது இந்தியா வெளியிடும் பொருளாதார எண்களின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

we-r-hiring

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை காலாண்டுக்கான GDP வளர்ச்சி 8.2% என பதிவானதாக மத்திய அரசு அறிவித்து பாராட்டுகளை பெற்றது.  ரிசர்வ் வங்கி மற்றும் பலவல்லுநர்கள் கணிப்பை மிஞ்சிய வளர்ச்சி என மோடி அரசு பெருமிதம் கொண்டது. ஆனால், IMF நடத்திய ஆண்டறிக்கை மதிப்பீட்டின் படி, இந்தியா பயன்படுத்தும் உற்பத்தி (Production) மற்றும் செலவு (Expenditure) அடிப்படையிலான GDP கணக்கீட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.

2025 ஆம் ஆண்டு வளர்ச்சியை கணிக்க 2011-12 நிதி ஆண்டை அடிப்படை ஆண்டாக நிர்ணயித்தது இந்தியா. இது 2025 நிலவரத்தின் படி மிகவும் பழையது  எனவும் இந்தியா பயன்படுத்தும் கணக்கீட்டு முறை மற்றும் தரவுகள் மீது IMF கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவின் உற்பத்தி மற்றும் செலவு அடிப்படையில் செய்த GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) கணக்கீட்டில் செலவு அடிப்படை தரவுகளில் பெரிய வேறுபாடு உள்ளதாக IMF குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் தலைமை புள்ளியில் அதிகாரி பிரணாப் சென் கூறுகையில், மத்திய அரசு வெளியிடும் GDP வளர்ச்சி எண்கள் குறைந்தது 1.5% வரை மிகைப்படுத்தப்பட்டுள்ளன. Consumer Price Index (CPI) தரவுகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் 12 ஆண்டுகளாக CPI தரவுகள் புதுப்பிக்கப்படவில்லை. இந்தியாவின் கணக்கீடு முறைகளில் வெளிப்படைத் தன்மை குறைவாக உள்ளது. இதன் விளைவாக, இந்தியா வெளியிடும் GDP எண்கள் உண்மையை பிரதிபலிக்கவில்லை என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என பிரணாப் சென் குறிப்பிட்டுள்ளாா்.

பிரணாப் சென் விமர்சனத்தை உறுதிப்படுத்திய IMF. கடன் வழங்கும் World Bank, Asian Development Bank போன்ற அமைப்புக்ள IMF சொல்வதின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கும். ஆனால், மோடி அரசு இந்திய பொருளாதார வளர்ச்சியை உலகளவில் விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் IMF இன் C Grade மதிப்பீடு, “உண்மையான இந்திய பொருளாதார நிலவரத்தை உலக நாடுகள் கவனிக்கத் தொடங்கியுள்ளன” என்பதை சுட்டிக்காட்டுகிறது.

தீபத்திருநாளை முன்னிட்டு, விறுவிறுப்பாக சூடுபிடிக்க தொடங்கிய அகல் விளக்குகளின் விற்பனை….

MUST READ