spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்...மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…

பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…

-

- Advertisement -

இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பிற ஏர்லைன்கள் திடீரென விமான டிக்கெட் கட்டணங்களை 10 முதல் 15 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்...மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…

இண்டிகோ விமான சேவை பாதிப்பால், பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை 10 மடங்கு வரை அதிகரித்தன. சென்னை – கோவை இடையிலான விமான கட்டணம் 10 முதல் 15 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கட்டண கொள்ளை புகார்கள் குவிந்ததை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

we-r-hiring

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு உட்பட்டே கட்டணங்கள் வசூலிக்க வேண்டும்.  நிலைமை சீராகும் வரை அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட பயணங்களுக்கு தகுந்த டிக்கெட் விலையை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என விமான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது, விமான போக்குவரத்து சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

MUST READ