அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் மற்றும் யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.
நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக உருவாக உள்ள புதிய படத்தின் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று நடைபெற்றது.

இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது– சி.வி.சண்முகம் உறுதி


