அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ”அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போதே இந்த இயக்கம் வெற்றி பெறுமா என கேட்டனர். அதன் பின் ஜெயலலிதாவை பார்த்து கேட்டனர். அதன்பின் நிர்வாகம் தெரியுமா என கேட்டவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.
இன்று நேற்றல்ல அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டினாா். திமுக, துரோகிகள் மட்டுமல்ல, நம்மோடு உறவாடிக் கொண்டிருப்பவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்தாா் . அரசியல் புரோக்கர்கள் மற்றும் சிலர் மூலம் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தாா். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாத என சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சில ஊடகங்கள் இந்த கட்சி குறித்து கருத்துக் கணிப்பு எனும் பெயரில் நம் மன உறுதியை குலைக்க மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது” என சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாா்.
மருத்துவ செலவுத் தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் – குறைதீர் ஆணையம் அதிரடி


