நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினை வழங்க வேண்டும் என குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பர்குலம் டவுன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (72). இவர் நெல்லை வண்ணாரப்பேட்டை இ எஸ் ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்னரும் செல்வராஜ் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதாந்திர தொகை செலுத்தி வந்திருக்கிறார். திடீரென செல்வராஜ் இருதய நோயால் 30.3.2023 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை செய்துள்ளார். அதற்கு மருத்துவ செலவாக ரூ.4,84,845 செலவு ஏற்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் நிறுவனம் சார்பில் ரூ.2.02.272 மட்டுமே வழங்கி மீத தொகையை வழங்க மறுத்துள்ளது.
இதனால் செல்வராஜ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தனக்குரிய முழுமையான தொகையை பெற்றுத் தர வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரணை செய்த தலைவர் பிறவி பெருமாள், உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் குறைவான தொகையை வழங்கியதை கண்டறிந்து ரூ.2,82,573 அதற்கு வட்டியும் சேர்த்து வழங்கவும், வழக்குச் செலவு ரூ. 10,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
2026 தேர்தல் முன்னிட்டு அடுத்தகட்ட நகர்வை நோக்கி அதிமுக தீவிரம்…



