அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 
சென்னையில் பரபரப்பை கிளப்பும் அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் இன்று வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தொடங்கின. வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து நடைபெறும் இக்கூட்டம், கட்சிக்குள் பல அரசியல் மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். சட்ட விதிப்படி அவைத் தலைவர் தலைமையில்தான் பொதுக்குழு கூடவேண்டும் என்பதால், தற்காலிக அவைத் தலைவராக கி.பி. முனுசாமி நியமிக்கப்பட்டார். இந்த தீர்மானம் கூட்டத்தில் ஒருமித்த ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தேர்தல் கூட்டணிகள், அமைப்பு வலுப்படுத்தல், பூத் குழு செயல்பாடு, பிரிந்து சென்ற முக்கிய தலைவர்களை மீண்டும் சேர்ப்பது போன்ற அம்சங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPS தலைமையில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைய ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் தவெக, திமுகவுக்கு செல்வதை தடுக்கவே இந்த முடிவாம். மீண்டும் அவர்களை ஒருங்கிணைக்க அதிமுக ஆர்வம் காட்டுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உறுப்பினர்கள் உடனுக்குடன் அறிய வாட்ஸ்அப் சேனல் உருவாக்கப்பட்டு, அதன் QR குறியீடு கூட்டம் நடைபெறும் வளாகத்தில் பதாகையாக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெகக் கட்சி கூட்டத்திலும் QR அடிப்படையிலான பதிவு செய்யப்பட்டதைப் போல, அதிமுகவும் இது போன்ற புதுமையான முன்னேற்பாட்டை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணி அமைத்தல், மக்கள் சந்திப்பு திட்டங்கள், பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்தல் போன்ற முக்கிய அரசியல் முடிவுகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட உள்ளன. வரவிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப அதிமுக தனது வியூகம் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட உணவு மெனு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
காலை உணவு:
கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, காபி/டீ
மதிய உணவு – அசைவம்:
மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சரை மீன் வறுவல், முட்டை மசாலா
சைவம்:
புடலங்காய் கூட்டு, கத்திரிக்காய், பீனீஸ் பொரியல், பருப்பு வடை, அப்பளம், வெஜ் பிரியாணி, முருங்கைக்காய்–பீன்ஸ் சாம்பார், தக்காளி ரசம், வத்தக்குழம்பு, பருப்பு பாயசம்.
அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை இந்த கூட்டம் தெளிவுபடுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
2026 இலக்கு: “தமிழ்நாடு தலைகுனியாது” – திமுகவின் பிரம்மாண்டப் பரப்புரை


