spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன்... இந்த தீபாவளிக்கு 3 சரவெடி இருக்கு!

தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன்… இந்த தீபாவளிக்கு 3 சரவெடி இருக்கு!

-

- Advertisement -

இந்த தீபாவளிக்கு மூன்று பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்றாலே எந்த படங்கள் வெளியாகிறது என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருப்பது வழக்கம். அப்படி இந்தத் தீபாவளியை சரவெடி ஆகப்போகும் படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

we-r-hiring

அயலான்

முதலில் நம்ம அயலான் தான். சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தப் படம் ஏலியனை மையமாக வைத்து பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் – ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் மில்லர்

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’  படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் தனுஷ் இதுவரை காணப்படாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.  படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். கலையரசன் மற்றும் நிவேதிதா சதீஸ் ஆகியோரும் கூட படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜப்பான்

இதற்கிடையில் நடிகர் கார்த்தி தற்போது ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்‘ படத்தில் நடித்து  வருகிறார். இது கார்த்தியின் 25வது படமாக உருவாகிறது. ‘ஜப்பான்’ படமும் இந்த வருடம் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.

எனவே அயலான், கேப்டன் மில்லர், ஜப்பான் என மூன்று சரவெடிகள் இந்த தீபாவளிக்கு… பண்டிகைய கொண்டாட ரெடி ஆகுங்கடே

MUST READ