spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு49 நிமிடத்தில் 75 சிக்கன் வெரைட்டிகளை செய்து அசத்திய ரஜினி ரசிகர்!!

49 நிமிடத்தில் 75 சிக்கன் வெரைட்டிகளை செய்து அசத்திய ரஜினி ரசிகர்!!

-

- Advertisement -

ரஜினியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் அவரது ரசிகரான சமையல் கலைஞரான செப்  குமரேசன் , 49 நிமிடத்தில் 75 வகையான சிக்கன் டிஷ்களை  செய்து சாதனை படைத்துள்ளார்கள்.49 நிமிடத்தில் 75 சிக்கன் வெரைட்டிகளை செய்து அசத்திய ரஜினி ரசிகர்!!ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை இன்று கொண்டாடிக் கொண்டாடுகின்றார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் பிறந்தநாளை வெகு  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகரான,  சமையல் கலைஞர் செஃப் குமரேசன் அவர்கள் உலகை சாதனை நிகழ்ச்சியாக 49 நிமிடத்தில் 75 வகையான சிக்கன்  வகைகளை  செய்து அசத்தியுள்ளார். 75 நிமிடத்தில் 75 வகையான சிக்கன் டிஷ்களை  செய்வதாக அறிவித்து சாதனையை தொடங்கிய சமையல் கலைஞர் குமரேசன்,  அந்த சாதனையை 49 நிமிடத்திலேயே முடித்தார்.

ரஜினியை போல விரைவாக விறுவிறுப்பாக பணிகளை மேற்கொண்டு 49 நிமிடத்திலேயே சாதனையை முடித்தார். இவரது சாதனையை அங்கீகரித்த நடுவர்கள்,  நோபல் புக் ஆப் ஓர்ல்ட் ரெக்கார்டில் (Noble book of world record) செப் குமரேசனின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர். சமையல் கலைஞர் குமரேசன் சாதனையை, சக கலைஞர்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சாதனை குறித்து சமையல் கலைஞர் குமரேசன் கூறும்போது ,  சிறுதானிய உணவு வகைகள் சமைப்பதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். சிறுவயதில் இருந்தே ரஜினி  அவர்களின் தீவிர  ரசிகனாக உள்ளேன். ஒவ்வொரு ரஜினி பிறந்த நாள் அன்றும்  விதவிதமான முறையில் அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 49 நிமிடத்தில் 75 சிக்கன் வெரைட்டிகளை செய்து சாதனை படைத்தேன்.

we-r-hiring

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த எந்திரன், அருணாச்சலம்,  படையப்பா, பேட்டை, முத்து, தப்பு தாளங்கள்,  ஜெயிலர், 16 வயதினிலே,  பாட்சா, மாப்பிள்ளை, முரட்டுக்காளை, ப்ரியா,  கூலி, சந்திரமுகி என  அவர் நடித்த படங்களின் பெயரிலும் ரஜினிகாந்த் சென்று வந்த  வெளி நாடுகளில் அவர் விரும்பி சாப்பிட்ட சிக்கன்  வகைகளின் பெயர் என 75 வகை சிக்கன் டிஸ்களை 49 நிமிடத்தில்  தயாரித்து சாதனை செய்துள்ளேன் என செஃப் குமரேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர் ரஜினி அவர்கள் நீண்ட ஆயுளுடன் மேலும் புகழோடு வாழ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்கிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன்

 

MUST READ