- Advertisement -
ஜி.கே.வாசம் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தாமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைபடி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சியன் முக்கிய நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தாா். இதன்பின் பேசிய ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலமாக இருக்கும் எனவும், இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள், இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என தெரிவத்தாா்.


