சென்னை அண்ணா சாலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து, சேவைகள் பாதிப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள 8 மாடிகளைக் கொண்ட பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு நிலவியது.
இன்று காலை சுமார் 9:30 மணியளவில் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதை அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் கவனித்தார். இன்று சனிக்கிழமை என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை, இதனால் ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.


108 ஆம்புலன்ஸ் சேவை: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்த சர்வர் அறை பாதிக்கப்பட்டதால், சென்னையில் “100” “108″ அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. அழைப்புகளை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
- காவல் கட்டுப்பாட்டு அறை ‘100’ சேவை துண்டிப்பு: பிஎஸ்என்எல் கட்டிடத்தில் இருந்த முக்கிய தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் சர்வர்கள் தீயில் சேதமடைந்ததால், சென்னையின் அவசர கால உதவி எண்ணான ‘100’ சேவைக்கான இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்கட்டண சேவை: இந்த அலுவலகத்தில் மின்வாரியத்தின் (TANGEDCO) சர்வர்களும் பராமரிக்கப்பட்டு வந்ததால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிகமாக முடங்கியது. தொலைத்தொடர்பு: சென்னை மாநகரின் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை (Internet) மற்றும் லேண்ட்லைன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயை அணைக்க மெட்ரோ குடிநீர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு (Short Circuit) காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரண்டாவது தளத்தில் இருந்த பேட்டரி வெடித்ததே தீ பரவக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அண்ணா சாலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



மின்கட்டண சேவை: இந்த அலுவலகத்தில் மின்வாரியத்தின் (TANGEDCO) சர்வர்களும் பராமரிக்கப்பட்டு வந்ததால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிகமாக முடங்கியது.