spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஅதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

-

- Advertisement -

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று (டிசம்பர் 20, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

இந்த அறிவிப்பில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னணி வீரர் சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, அதிரடி பேட்டர் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணியை வழிநடத்தவுள்ளார். இந்தத் தேர்வில் மிகப்பெரிய ஆச்சரியமாக, முன்னணி வீரர் சுப்மன் கில் பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அணியின் நம்பகமான ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் புதிய துணை கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு

அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் மற்றும் அதிரடி பினிஷர் ரிங்கு சிங் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம், சுப்மன் கில்லுடன் சேர்த்து விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவும் தனது இடத்தை இழந்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பைத் தொடரை வெல்லும் நோக்கில், இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட சமபலமான அணியாக இது பார்க்கப்படுகிறது.அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு

நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது சொந்த மண்ணில் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் இந்த சமபலமான அணியைத் தேர்வு செய்துள்ளது.

சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை – நீதிபதி ஆர்.மகாதேவன்

MUST READ