spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நில உரிமையை வலியுறுத்தி பிரேசிலில் போராட்டம்

நில உரிமையை வலியுறுத்தி பிரேசிலில் போராட்டம்

-

- Advertisement -
நில உரிமையை வலியுறுத்தி பிரேசிலில் போராட்டம்
நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நில உரிமையை வலியுறுத்தி பிரேசிலில் போராட்டம்

நில உரிமையை வலியுறுத்தி பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி பேரணி சென்று முழக்கமிட்டனர்.

we-r-hiring

மழைக்காடுகள், மூலிகை மரங்கள் என இயற்கையாகவே செழுமையான நாடாக திகழ்கிறது பிரேசில்.

அங்கு பெரும்பாலான நிலங்கள் பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் நிலத்தை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

நில உரிமையை வலியுறுத்தி பிரேசிலில் போராட்டம்

இதனை எதிர்த்து அந்நாட்டு பழங்குடி மக்களுக்காக செயல்பட்டு வரும் அமைப்புகள் இணைந்து 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடப்பாண்டு போராட்டம் அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு நில உரிமையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

அனைவரும் அவர்களது பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து நடனமாடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்நாட்டின் முன்னால் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆட்சி காலத்தில் பழங்குடி மக்களுக்கு நிலங்களை எண்ணெய் எடுக்கவும் சுரங்கங்கள் அமைக்கவும் பயன்படுத்த உத்தரவிட்டார் ‌.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இடதுசாரி தலைவரான தற்போதைய அதிபர் லுலா டா சில்வா தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என நம்பிக்கை இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 28 ஆம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ