spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் நாளை முதல் 3 நாட்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து!!

திருப்பதியில் நாளை முதல் 3 நாட்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து!!

-

- Advertisement -

தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.திருப்பதியில் நாளை முதல் 3 நாட்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து!!தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரும் 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதால், 30ம் தேதி முதல் ஜனவாி 8ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல், திருப்பதிக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை அதிகளவு பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். வைகுண்டம் காத்திருப்பு காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பிவிட்டன.

we-r-hiring

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் வருவதால் விஐபி டிக்கெட் நாளை முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 நன்கொடை வழங்கினால் பக்தர்களுக்கு தரப்படும் விஐபி டிக்கெட் டிசம்பா் 27, 28, 29-ல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்

MUST READ