spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதென்காசி பகுதியில் 'கேப்டன் மில்லர்' படத்தை மீண்டும் துவங்க அனுமதி!

தென்காசி பகுதியில் ‘கேப்டன் மில்லர்’ படத்தை மீண்டும் துவங்க அனுமதி!

-

- Advertisement -

‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் இதுவரை காணப்படாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.

we-r-hiring

captain-miller-44.jpg

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். கலையரசன் மற்றும் நிவேதிதா சதீஸ் ஆகியோரும் கூட படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் பாதுகாப்பு பகுதியில் மிகப் பெரிய செட் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக குண்டுபிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியதால் படப்பிடிப்பை நிறுத்தி வைக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது படக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

MUST READ