அன்புள்ள விஜய் அண்ணா தடைகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. உண்மையான திருவிழா ”ஜனநாயகன்” வெளியாகும் நாளில்தான் தொடங்கும் என விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வலைதள பக்கத்தில் ஆதரவு குரல் ஏழுப்பியுள்ளாா்.


எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் போர்டு, தணிக்கை சான்றிதழை வழங்காததாலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வர உள்ள நிலையிலும் பட வெளியீட்டை ஒத்தி வைப்பதாக பட குழு நேற்று அறிவித்திருந்தது.
அரசியல் பயணம் காரணமாக விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜனநாயகன் அறிவித்த நேரத்தில் வராத நிலையில் விஜய்யின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திரை பிரபலங்களும் ஜனநாயகமன் படம் மற்றும் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் ரவி மோகன், சிபிராஜ், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரம் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அன்புள்ள விஜய் அண்ணா தடைகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிட பெரிய புயலை கடந்திருக்கிறீர்கள், இதுவும் கடந்து போகும் உண்மையான திருவிழா ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் தொடங்கும் என நடிகர் சிலம்பரசன் பதிவிட்டுள்ளாா்.
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் பங்குச்சந்தை 4வது நாளாக கடும் சரிவு…


