தமிழக அரசு முருகன் கோவிலை இடித்துவிட்டதாக கூறி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியை பரப்பி வரும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் பெரியார் கழகத்தினர் தென் மண்டல ஐஜியிடம் புகார் மனு அளித்தனா்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் 1994 ஆம் ஆண்டு தமிழக அரசு அருந்ததியர் மட்டும் ஈழத்தமிழர்களுக்கு பட்டா வழங்கியது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திடீரென குமரன் குன்று எனக்கூறி முருகன் கோவிலை கட்டி அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் காவல்துறையினர் முருகன் கோவிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் இந்து முன்னணியினர் இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தற்போது இது தொடர்பாக பல்வேறு காணொளிகளை இந்து முன்னணி மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பரப்பி வருகின்றனர். அதில் தமிழக அரசு முருகன் கோவிலை இடித்து விட்டதாக கூறி பொய் செய்தியை பரப்பி வருகின்றனர்.

மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றத்தை போல திருப்பூரிலும் முருகன் கோவில் இடிக்கப்பட்டது எனக்கூறி பொய் செய்தியை பரப்பி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் பெரிய கழகத்தினர் 20க்கும் மேற்பட்டோர் தென் மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிரதரிடம் புகார் மனு அளித்தனர்.
அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…


