spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!!

பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!!

-

- Advertisement -

மதுரவாயலில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை. மறைத்து வைத்திருந்த 40 சவரன் தப்பியது.பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!! சென்னை மதுரவாயல் சொக்கநாதன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஆல்பின் டி பிளம்பிங். ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர் கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு, தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுள்ள நிலையில், பேராசிரியர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். உறவினரான ஜஸ்டின் ஜேம்ஸ் அவ்வப்போது வீட்டை பார்வையிட்டு வந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீஸ்சாா் விசாரணை மேற்கொண்டனா். பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை கொள்ளை போனதும் பீரோவின் அடியில் லாக்கரில் பதுக்கி வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் தப்பியது தெரிய வந்தது.

we-r-hiring

வீட்டின் உரிமையாளர் வந்த பிறகு திருடு போன பொருட்களின் விவரம் தெரிய வரும் என கூறப்படுகின்றது. இக்கொள்ளை சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…

MUST READ