அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறி தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் பிரதமர்.
அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை பிரதமா் கூறினாா். உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் அந்த விவசாயிகளுக்கு உதவி செய்யும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் இந்த பொங்கல் விழா. உலகத்தை நேசிக்கக் கூடியவர்கள் தமிழர்கள் அப்படி அவர்களது நேசத்தை நான் சம்பாதித்து இருக்கிறேன் அது எனது பாக்கியம். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் லோரி மகா சங்கராந்தி என்ற வெவ்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பெயர்களில் அவை நான் கடந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரார்த்தனை செய்தேன்.
அதேபோல காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தமிழர்களுக்குமான தொடர்பை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. தமிழர்கள் கலாச்சாரத்தில் விவசாயம் என்பது உயிர் ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. அது பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இருந்து தான் விகாஷ் பாரதம் என்ற பெரிய லட்சியத்தை நாம் தற்பொழுது செயல்படுத்தி வருகிறோம்.

தண்ணீரை பாதுகாப்பது நமது இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்றவை இந்த விழாக்களில் உள்ளடக்கமாகக் . அதை காலம் காலமாக தமிழர்கள் செய்து வருகிறார்கள். இந்த மண்ணை பொன் போலவும், தங்களது கண் போலவும் கருதுவர்கள் தமிழர்கள். இயற்கை விவசாயம் நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம் என விவசாயத்தில் பல்வேறு படிநிலைகளையும் பரிசோதித்துப் பார்த்தவர்கள் தமிழர்கள். சில மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில் நான் கலந்து கொண்டேன்.
அப்போது நமது விவசாயிகள் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்புகளை மிக சாதாரணமாக செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து வியந்து போனேன். நமது தட்டு நிறைவதற்கும் நமது மனது நிறைவதற்கும் விவசாயம் தான் தேவை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் என முழக்கமிட்டு தனது உரையை முடித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சமத்துவ நிலையை நோக்கி தமிழ்நாடு – பொங்கல் விழாவில் முதல்வர் பேச்சு…


