அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 11வது சுற்றின் முடிவில் 18 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முன்னிலையில் உள்ளார்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரம் காளைகள் மற்றும் 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 11 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 860 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 211 காளைகள் பிடிபட்டன. மொத்தம் 35 வீரர்கள் 12வது மற்றும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் 2 சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

இதனிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 11-வது சுற்று முடிவில் வலையங்குளம் பாலமுருகன் 18 காளைகளை பிடித்து முன்னிலையில் உள்ளார். அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 16 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 10 காளைகளை அடக்கி 3ம் இடத்தில் உள்ளார். பதினொன்றாம் சுற்றில் 4 காளைகளை பிடித்த சிவகங்கையை சேர்ந்த அமரன் அடுத்த சுற்றுக்கு தேர்வாகினார்.


