spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு... சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர்...

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!

-

- Advertisement -

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளரான குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.

we-r-hiring

மதுரை பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 870 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித், பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தலா 16 காலைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். நாமக்கல்லை சேர்ந்த கார்த்தி 11 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து, முதலிடம் பிடித்த வீரரை தேர்வு செய்ய குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். இதனை தொடர்ந்து, அவருக்கு துணை முதலமைச்சர் வழங்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசான கார் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பிரபாகரன் மற்றும் 3வது இடம் பிடித்த நாமக்கல் கார்த்திக்கு, இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது.

சிறந்த காளையாக குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளைக்கான 2வது பரிசு, கைக்குறிச்சியை சேர்ந்த காளை தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டது.

 

 

MUST READ