spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதிருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!

திருவள்ளுவர் தினம்: வண்டலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்!

-

- Advertisement -

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.

we-r-hiring

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், திருவள்ளுவர் தினத்தையொட்டி காலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் வருகை புரிந்தனர். வணடலூரில் இயற்கை எழில் சூழ்ந்த பூங்காவில் யானை, புலி, மான்கள், ஒட்டகச் சிவிங்கி, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளை கண்டு ரசித்தனர். மேலும் பல்வேறு விதமான பறவைகள், சிங்கம் மற்றும் மான் சபாரி செய்தும் பொழுது போக்கினர். இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று மாலை வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை புரிந்தனர்,

இதனிடையே நாளை காணும் பொங்கலை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு பூங்கா திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து பூங்காவிற்கு வருவதற்கு ஏற்கனவே இருக்கும் இரண்டு வாகனங்களை விட கூடுதலாக 10 வாகனங்கள் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நுழைவுச்சீட்டு வாங்கும் இடங்களில் அதிக கவுண்டர்கள் திறக்கப்பட்டு whatsapp இணையதளம் மூலமும் மொபைல் ஆப் மூலமும் டிக்கெட் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் அனைத்து பகுதிகளும் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 100 காவலர்கள் 65 வனத்துறை அதிகாரிகள் மற்றும் 60 தன்னால் தன்னார்வலர்கள் என 225 நபர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

MUST READ