தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிற தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் கையெட்டையும் வெளியிட்டார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மனித இனம் தனது சிந்தனைகளை பிறருக்கும் கொண்டு சேர்க்கும் கருவி தான் புத்தகம் வாசிப்பு மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகள் தோறும் அறிவு தீ பரவ வேண்டும் என தான் புத்தக திருவிழாக்களை நடத்துகிறோம். குறிப்பாக சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடைபெற்று வருகிறது.
சர்வதேச பன்னாட்டு புத்தக காட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு முதலமைச்சராக மட்டும் அல்ல புத்தகம் வாசிப்பாளராக பெருமையாக உள்ளது. ஏற்கனவே நந்தனத்தில் புத்தக காட்சி செல்கிறது. அப்போது இந்த சர்வதேச புத்தக காட்சி எதற்கு என கேட்பார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்கிறேன். இந்த சர்வதேச புத்தக காட்சி மொழிபெயர்ப்பு, பதிப்பகம் பரிமாற்றம். பல நாடுகளுக்கு இங்குள்ள புத்தங்களை கொண்டுபோய் சேர்ப்பது முக்கியத்துவமாக உள்ளது. அதனால் இந்த புத்தக காட்சி நடந்தப்படுகிறது.

உலக நாடுகளில் நடப்பது போல் பன்னாட்டு புத்தக காட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என ஆசைபட்டேன் அது நிறைவேறி உள்ளது. நமது சிந்தனைகள் எழுத்துக்கள் பல நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும் என ஆசைப்பட்டேன். உலகின் உயரிய சிந்தனைகள் நம் மக்களுக்கும் வந்து சேர வேண்டும் அதற்காக இந்த சர்வதேச புத்தக காட்சி நடத்தப்படுகிறது. இந்த சர்வதேச புத்தகக் காட்சியில் சுவாரசியமான உரையாடல்களும் இந்த பன்னாட்டு புத்தக காட்சியில் அரங்கேறி உள்ளது. அதற்கும் வாழ்த்துக்கள். அறிவு சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கக்கூடிய அருமை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பாரதியாரின் கவிதை, பாரதிதாசனின் கவிதைகள் உலகமெங்கும் பரவ வேண்டும், தமிழ் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை உலக மக்களுக்கும் போய் சேர வேண்டும் ஆழமான பார்வை சிந்தனை உள்ள கருத்துக்கள் உள்ளது. உலக பிரநிதிகளுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன். தமிழ்நாடு முதலீட்டுக்கு மட்டும் சிறந்ததல்ல அறிவை பகிர்ந்து கொள்வதிலும் சிறந்த மாநிலமாக உள்ளது. மொழி என்பது பிரிக்கக்கூடியது அல்ல உலக மக்களின் இணைக்கக்கூடிய பாலமாக இருக்கும். அன்புக்குரிய மாணவர்களே, இளைஞர்களே நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும், வளமான சமூகத்தை படைப்போம் தமிழ் மொழியை உலகத்திற்கு கொண்டு போய் சேர்ப்போம்.

மனதை நொறுக்கும் செய்தி டெல்லியில் இருந்து வந்தது. சாகத்திய அகாடமி விருதுகள் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் மத்திய அரசின் கலாச்சாரத்துறை தலையிட்டால் விருது அறிவிக்கக்கூடிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி நடக்குமா என தெரியவில்லை. கலை இலக்கிய விருதில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது. தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக இதனை எதிர்கிறது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், அமைப்புகளை சார்ந்தவர்களும் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். இது காலத்தின் தேவை என்பதை நாங்களும் உணர்ந்து இருக்கிறோம்.
ஒரு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன். தமிழகத்தில் ஆண்டுதோறும் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும்.விருது உடன் ஐந்து லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். அடுத்ததும் திராவிட மாடல் 2.O ஆட்சிதான் வரும். அப்போது இன்னும் சிறப்பாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


