தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமத்தைச் சேர்ந்த செல்வன். திருமணி (13) த/பெ.வனராஜன், செல்வன், நரேன் ஸ்ரீ கார்த்திக் (12) த/பெ.ஆறுமுகம் மற்றும் செல்வன்.முகேந்திரன் (12) த/பெ.கதிரேசன் ஆகிய மூன்று சிறுவர்கள் நேற்று (26.01.2026) மாலை சுமார் 04.15 மணியளவில் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,” என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!



