spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுWifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

-

- Advertisement -

விபத்துகளை குறைக்க (WIFI)வயர்லெஸ் அலைவரிசையில் வேகமாக இயங்கும்  V2V தொழில்நுட்பத்தை 2026-க்குள் செயல்படுத்த ஒன்றிய அரசின் புதிய திட்டம்.

Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

we-r-hiring

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4.80 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகமாகும்.

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வாகனங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமான V2V (Vehicle to Vehicle) முறையை 2026 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்துக்கு தகவலை உடனடியாக அனுப்பும் இந்த தொழில்நுட்பம், விபத்துகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

V2V. எவ்வாறு செயல்படும்?
V2V தொழில்நுட்பத்தில், வாகனத்தில் பொருத்தப்படும் On-Board Unit மூலம் அந்த வாகனத்தின் வேகம், திசை மற்றும் இருப்பிடம் துல்லியமாக கண்காணிக்கப்படும். முன்னால் செல்லும் வாகனம் திடீரென நிற்பது, பிரேக் அடிப்பது போன்ற தகவல்கள், பின்னால் வரும் வாகனத்துக்கு உடனடியாக அனுப்பப்படும். இதன் மூலம் காரின் டேஷ் போர்டில் ஒலி மற்றும் ஒளி சிக்னல்களுடன் எச்சரிக்கை வழங்கப்படும்.

இந்த V2V அமைப்பு சுமார் 200 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு இந்த தொழில்நுட்பத்தை பொருத்த சுமார் ரூ.5 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ADAS-க்கும் V2V-க்கும் என்ன வேறுபாடு?
ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில், ADAS கேமரா மற்றும் ரேடார் சென்சார்கள் மூலம் செயல்படுகின்றது. ஆனால் V2V தொழில்நுட்பம் Wi-Fi அடிப்படையிலான வயர்லெஸ் அலைவரிசையில் இயங்கி, மிக வேகமாக தகவல்களை பரிமாறும் தன்மை கொண்டது.

தற்போதைய கட்டத்தில், இந்த V2V தொழில்நுட்பத்தை கார், வேன், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் பொருத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விமான விபத்து – எம்.பி உட்பட 15 பேர் உயிரிழப்பு!!

MUST READ