Homeசெய்திகள்சென்னைசென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாகவும், மொத்தம் திட்டத்திற்கான 63,246 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  தி.மு.க எம்.பிக்கள் கிரிராஜன் மற்றும் கனிமொழி என்.வி.என் சோமு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தை விரைந்து முடிக்க விரைவான நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? எனவும், மேலும் நிதி விவரங்கள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை இணை அமைச்சர் டோக்ஹன் சாஹு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 63,246.4 கோடி ரூபாய்க்கு 118.9 கிலோமீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் தடம் அமைக்க ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதில் மத்திய அரசு சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு 10,354.15 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாகவும், இதேபோல் ஜப்பானை சேர்ந்த JICA  20,196 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்து 1,995 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும், ADB (ஏசியன் டெவலப்மெண்ட் வங்கி) 5,596.5 கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்து 790 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ… தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்…

we-r-hiring

 

MUST READ