சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி செய்துள்ளனா்.
சென்னை கொரட்டூாில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் உரிய நடவடிக்கை கோாி எடுக்ககோாி மனு அளித்துள்ளனா். கோயில் நிலத்தில் வீடுகளை கட்டி, ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக அலையன்ஸ் ஆா்ச் ஸ்பிாிங்ஸ் என்ற நிறுவனத்தின் மீது புகாா் எழுந்தது.
இந்நிலையில், அலையன்ஸ் ஆா்ச் ஸ்பிாிங்ஸ் தற்போது அா்பன் ரைஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருவதாகவும், கோயில் நிலத்தில் பட்டா இருப்பதாக புகாா் எழுந்த நிலையில் நிறுவன உரிமையாளா் மறைத்ததாகத்தாகவும் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனா்.

மேலும், கோயில் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், தங்களால் விற்க முடியவில்லை எனவும் வங்கி தரப்பிலும் வேறு ஆவணங்கள் கேட்டு நெருக்கடி தரப்படுவதாகவும், 6 ஆண்டுகளாக மூலப்பத்திரத்தை வழங்கக் கோாி பில்டரிடம் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை என குடியிருப்புவாசிகள் வேதனை தொிவித்துள்ளனா்.


