spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

-

- Advertisement -

இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால், மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வருகிறது. குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதலை அடுத்து குவைத்தில் அமெரிக்க தூதரகத்துக்கு யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்கர்கள், பாதுகாப்பு கருதி கவனமாக இருக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோதல் நடக்கும் இடத்துக்கு செல்லாமல் விழிப்புடன் இருக்க அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) என்பது ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ளஉலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். இது பாரசீக வளைகுடாவை அரபிக்கடலுடன் இணைக்கிறது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆகியவை இந்த குறுகிய பாதை வழியாகவே செல்கின்றன. இது ஆசிய நாடுகளுக்கு ஆற்றல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

we-r-hiring

தினமும் சுமார் 15 மில்லியன் பீப்பாய்கள் (bpd) கச்சா எண்ணெய் இந்த வழித்தடத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும். இது உலகளாவிய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதியை சுமார் 2.5 முதல் 2.7 மில்லியன் பேரல்கள் (bpd) வரை இந்த வழித்தடத்தின் வழியாகவே பெறுகிறது. ஈரான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் முக்கிய வழித்தடமாக இது உள்ளது. பதற்றமான காலங்களில் இந்தப் பாதை ஒரு முக்கிய “சண்டையிடும் புள்ளியாக” (Choke Point) மாறுகிறது.

2026-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படிஅமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக இந்த வழித்தடத்தில் பதற்றம் ஏற்பட்டு எண்ணெய் கப்பல்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அதிர்ச்சி…

MUST READ