spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எந்தவித புதிய திட்டங்களையும் பிரதமர் அறிவிக்கவில்லை - வைத்திலிங்கம் எம்.பி.

எந்தவித புதிய திட்டங்களையும் பிரதமர் அறிவிக்கவில்லை – வைத்திலிங்கம் எம்.பி.

-

- Advertisement -

ரங்கசாமியின் மாநில அந்தஸ்து கோரிக்கை; அதுபற்றி எந்த பதிலும் பிரதமர் தராமல், தான் நினைத்ததை மட்டுமே பிரதமர் மேடையில் பேசிவிட்டு சென்றுள்ளார் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்துள்ளாா்.எந்தவித புதிய திட்டங்களையும் பிரதமர் அறிவிக்கவில்லை - வைத்திலிங்கம் எம்.பி.புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, “புதுச்சேரியில் அரசு விழா என கூறிவிட்டு, அரசு விழாவில் அரசியல் பேசி ஒரு புதிய நாகரீகத்தை படைத்தவர்தான் பிரதமர் மோடி. முதலீடு இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. இது அரசு விழாவா? கட்சி விழாவா? என யோசிக்க வைத்துள்ளது. இதில் தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து எதுவும் பாடப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அவர் கூறவில்லை. முழுமையாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை ஒதுக்கியுள்ளனர்.

முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்த தனது வேதனையை இன்னும் அழுத்தமாக மேடையில் சொல்லி இருக்கலாம். மாநில அந்தஸ்து என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் தனி ஒருவரின் கருத்தாக கூறி தவறு செய்துவிட்டார். முதலமைச்சர் பேசியதை சிறிது காதில் வாங்கிகொண்டு அதுபற்றி எந்த பதிலும் பிரதமர்  தராமல், தான் நினைத்ததை மட்டுமே பிரதமர் மேடையில் பேசிவிட்டு சென்றுள்ளார்.

we-r-hiring

முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிப்போம் என கூறினார். அவ்வாறு புறக்கணித்தால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தரும். நாங்களும் அவர்களுடன் தேர்தலை புறக்கணிப்போம். எந்தவித புதிய திட்டங்களை பிரதமர் அறிவிக்கவில்லை. முதலமைச்சர் அவர்கள் மாநில தேர்தலை புறக்கணிக்க தயாரா? சீக்கிரம் ஒரு முடிவெடுங்கள். நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என பேட்டியளித்துள்ளாா்‌.

விஜய் சிக்கியது எப்படி? சங்கீதாவின் துப்பறியும் ஏஜென்சி! ஜெகதீஷ்வரன் நேர்காணல்!

 

MUST READ