Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!

மகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!

-

- Advertisement -

தமிழகத்தை தொடா்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது.மகளிருக்கு ஹேப்பி நியூஸ்!! மீண்டும் ரூ.5000 வரவு!!புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கக் கூடும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75 சதவீதம் புதுச்சேரியில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டுவரப்படும். பொங்கல், தீபாவளி பரிசுத்தொகை, இலவச அரிசி, சத்துணவு திட்டம், இலவச வேட்டி சேலை என பல்வேறு திட்டங்கள் புதுச்சேரியிலும், தமிழகத்திலும் உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது முதலில் ரூ.750 மதிப்புள்ள வெல்லம், பச்சரிசி, சமையல் எண்ணெய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இது புதுச்சேரியிலும் எதிரொலித்ததது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் தமிழகத்தை போல பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென ரங்கசாமி வலியுறுத்தினார். போதுமான நிதி இல்லாததால், தமிழகத்தை போலவே ரூ.3 ஆயிரம் வழங்க ஒப்புதல் அளித்தார். அதேபோல் தமிழகத்தில் 3 மாதத்துக்கான மகளிர் உரிமத்தொகை ரூ.3 ஆயிரம், கோடைக்கால சிறப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ. 5 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், புதுச்சேரி அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் அதிகரித்தது. மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழகத்திலேயே ரூ 5 ஆயிரம் கொடுக்கிறார்கள். புதுச்சேரியிலும் கொடுக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது.

we-r-hiring

இதனை தொடர்ந்து தமிழகத்தை பின்பற்றி புதுச்சேயிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு இரண்டு மாதத்துக்கான உதவித்தொகையும் சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதனைக்கூட முதல்வரால் அறிவிக்க முடியவில்லை. அதன்படி, புதுச்சேரியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதாந்திர நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு பிப்ரவாி, மாா்ச் மாதங்களுக்கான உரிமை தொகை ரூ.5,000 மொத்தமாக வழங்கப்படும் என புதுச்சோி முதல்வா் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். தற்போது தேர்தல் வரவுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்கள், அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் தொகையைச் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 ஆக ஒரே தவணையில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 63,000 குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.31.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!

 

MUST READ