Homeசெய்திகள்தமிழ்நாடுகேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

-

- Advertisement -

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை இழப்பு ஏற்பட்டு மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனா்.கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?போர் துவங்கியுள்ள காரணத்தினால் இந்தியா முழுக்க எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வரக்கூடிய நிலையில் சுற்றுலா பெரிதும் கேஸ் தட்டுப்பாடு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து இருந்த நிலையில், கேஸ் தட்டுப்பாடு சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கு கிடைக்கப்படக்கூடிய கேஸ் முழுவதுமாக தடைபட்டுள்ளதால் ஹோட்டல்களை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை மட்டுமே நடத்த முடியும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்து வரக்கூடிய நிலையில் பீகார் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

we-r-hiring

தற்போது கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டால் மீண்டும் சொந்த ஊரே திரும்பக்கூடிய நிலை ஏற்படும் என வட மாநிலத்தவர் கவலை தெரிவித்து வருகின்றனர். கேஸ் தட்டுப்பாட்டால் கோடைகாலத்தில் சுற்றுலா முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனா்.

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

MUST READ