Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

-

- Advertisement -

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

இது குறித்து  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

we-r-hiring

சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள் கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பி ஓடிவிட்ட நிலையில், சிக்கிக் கொண்ட ஒரு சிறுமியை இரு மிருகங்களும் சிதைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உதவுவதற்கு கூட ஆள் இல்லாமல் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த கொடிய நிகழ்வு தான் சான்று ஆகும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரிசையில் இந்தக் கொடூரமும் இணைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. நாளொரு விழாவும், பொழுதொரு கொண்டாட்டமாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது.

திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் கொடூரமான சான்று ஆகும். தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்

 

MUST READ