spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை – ஒன்றிய அரசு முடிவு

-

- Advertisement -
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை – ஒன்றிய அரசு முடிவு
விலை உயர்வு உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு

சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி குறைந்ததே விலை உயர்வதற்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மழை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் வெப்பம் போன்ற பாதிப்புகளால் விளைச்சல் மேலும் குறையலாம் என கருதப்படுகிறது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு
இதனால் சர்க்கரை உற்பத்தி கடந்தாடை விட 6 முதல் 9 விழுக்காடு வரை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது உள்நாட்டு தேவைக்காக கணிசமான சர்க்கரை கையிருப்பு இருந்தாலும் கோடை காலத்தில் குளிர்பானம் உள்ளிட்டவைக்கான சர்க்கரை தேவை அதிகமாக இருக்கும் என்பதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு

எனவே சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் உலக அளவில் சர்க்கரை விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

MUST READ