Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்": நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்": நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை சீமான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, கட்சியின் “செயற்பாட்டு வரைவு” எனப்படும் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது.

நாம் தமிழர் கட்சியின் 2026 தேர்தல் அறிக்கையானது, தமிழகத்தின் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கிறது. குறிப்பாக, கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் ஆகிய அடிப்படைத் தேவைகளை முழுமையாக அரசுடைமையாக்கி, அவற்றை வணிகமயமாக்கலில் இருந்து விடுவித்து, தரமான சேவைகளாக அனைவருக்கும் இலவசமாக வழங்குவதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. விவசாயத்தை வெறும் தொழிலாகப் பார்க்காமல், அதனை ஒரு அரசுப் பணியாக மாற்றி, விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதோடு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டங்களையும் முன்னெடுக்கிறது. பொருளாதார ரீதியாக, தன்னிறைவு பெற்ற கிராமப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, தமிழகத்தில் நிலவும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. மேலும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்கும், அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதிகாரப் பரவலாக்கத்திற்கும் இந்த தேர்தல் அறிக்கை வழிவகை செய்கிறது.

we-r-hiring

இந்த முறை எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி “தனித்துப்போட்டி” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களை விட கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெற்று பிரதான சக்தியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

“வெல்லப்போவது சின்னம் அல்ல, நம் இனத்தின் எண்ணம்” என்ற முழக்கத்துடன் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ள சீமான், நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு மாநிலம் தழுவிய இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு

MUST READ