Homeசெய்திகள்சினிமாதுரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…

துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…

-

- Advertisement -

தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்​றி​பெற்ற ‘துரந்தர்’ படத்​தின் அடுத்த பாகம், ‘துரந்தர்; த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகி​யுள்​ளது. தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த முறையீடு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முன்வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தற்போதைய சூழலில், இப்படத்தில் அரசியல் சார்புடைய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், படம் வெளியானால் அது வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கறிஞர் ஷீலா என்பவர் அவசரமாக மனு தாக்கல் செய்து, “துரந்தர் 2” திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தற்காலிக தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

we-r-hiring

ஆனால், இந்த மனுவை நேரடியாக ஏற்காமல், முறையான வழக்குத் தாக்கல் நடைமுறையை பின்பற்றி மறுவகையில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது. அதன் பின்னர், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் முறையீடு செய்யப்பட உள்ளது.

ஆதித்யா தார் இயக்கிய இப்படம், பயங்கரவாதத்திற்கு எதிரான கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

MUST READ