உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 95 முதல் 99 சதவீதம் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே செல்கிறது, அவற்றை வெட்டிவிடுவோம் என்று ஈரான் இப்போது மிரட்டியுள்ளது என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”செயற்கைக்கோள்கள் அல்ல. 200 அடி ஆழத்தில் கடலடியில் உள்ள உண்மையான கண்ணாடியிழை கேபிள்கள். அவற்றுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. உலகின் 30 சதவீத இணையம் ஒரே ஒரு நெருக்கடிப் புள்ளி வழியாகச் செல்கிறது: அது ஹோர்முஸ் ஜலசந்தி. தற்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் போர் மண்டலத்தின் வழியாக 20-க்கும் மேற்பட்ட கேபிள்கள் செல்கின்றன.
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேரம் அவகாசம் கொடுத்திருக்கிறார் — இல்லையென்றால், அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களை அவர் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

ஈரானின் பதில்: எங்கள் மின் கட்டமைப்பைத் தொட்டால், கேபிள்களை வெட்டிவிடுவோம்.
இது சாத்தியம் என்பதை ஹூதிகள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர் — இந்தப் போரின் ஆரம்பத்தில் அவர்கள் செங்கடல் கேபிள்களைத் தாக்கினர். ஈரான் பார்த்தது. அதிலிருந்து ஈரான் பாடம் கற்றது.
வங்கிச் சேவை, கிளவுட், கிரிப்டோ, தகவல் தொடர்பு, நிதிச் சந்தைகள், இவை அனைத்தும் அந்தக் கேபிள்கள் வழியாகவே செல்கின்றன. இது ஒரு இணையவழித் தாக்குதல் அல்ல. இது ஒரு கத்தரித் தாக்குதல் — உலக இணைய அமைப்பை செயல்படுத்த கேபிள் தவிர மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
22-வது நாளை எட்டியது அமெரிக்க – இஸ்ரேல் – ஈரான் போர்: 2,500 கூடுதல் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!
