Homeசெய்திகள்அரசியல்உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி ...

உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …

-

- Advertisement -

மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம் கிடையாது. இலவசங்கள் என்று சொல்லக் கூடாது சமூக நீதிக்கான முதலீடு என்றுதான் பார்க்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளாா்.உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி ...தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவரும், திமுக எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தா்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, இந்த தேர்தல் அறிக்கை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சி நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதாகும். செம்மொழி பூங்கா போன்ற பண்பாட்டு முயற்சிகள் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு போன்ற எதிர்கால வளர்ச்சி அம்சங்கள் வரை அனைத்தையும் கருத்தில் கொண்டு அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

we-r-hiring

மேலும், இந்த அறிக்கையை உருவாக்குவதற்காக பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதுடன், சுமார் 80,000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துகளும் சேகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். வாக்குறுதிகள் நடைமுறையில் செயல்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியதாகவும், அவற்றின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சில திட்டங்கள் அந்தந்த பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு மற்றும் சூழ்நிலைக் காரணங்களால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கனிமொழி விளக்கினார். மேலும், வாக்குறுதிகளில் இடம்பெறாத பல திட்டங்களையும் திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியமான சில திட்டங்களை நிறைவேற்ற முடியாததும் இதற்கான காரணங்களில் ஒன்றாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, தேர்தல் அறிக்கையில் இடம்பெறாதிருந்தாலும், காலை உணவுத் திட்டம், “தமிழ்ப்புதல்வன்”, “புதுமைப் பெண்”, “நான் முதல்வன்”, “தாயுமானவன்” போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதையும் அவர் முக்கிய சாதனையாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அண்ணா திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த கனிமொழி, அவை நடைமுறைக்கு ஏற்றதாக இல்லையெனவும், அவற்றை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000 ஆக உயர்த்தும் அறிவிப்பை முதல்வர் வெளியிட்ட பிறகே எதிர்க்கட்சி அதனை முன்வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் கையில் பணம் சென்றால் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இல்லத்தரசிகளுக்கான ரூ.8000 மதிப்பிலான கூப்பன் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு இந்த கூப்பன் வழங்கப்படும் என முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளதாக விளக்கினார். வீடுகளில் தேவையான பொருட்களை இந்த கூப்பன் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், நடைமுறைக்கு ஏற்ற மற்றும் சமூக நலனை மையப்படுத்திய தேர்தல் அறிக்கையாக திமுக தனது திட்டங்களை முன்வைத்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

MUST READ