CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் சட்ட வரைவுக்கு மாநிலங்களவையில் திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா இது குறித்து கூறியிருப்பதாவது, ” கடந்த 3 ஆண்டுகளில் 438 மத்தியபடை வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். 50,000 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிக பணிச்சுமை, மன அழுத்தம், போதிய ஊதியம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் நடந்தபோது, மத்தியப்படை வீரர்களின் உயிரிழப்பை குறிப்பிட்டு பிரதமர் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இன்று அவர்களுக்கு எதிரான மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

IPS அதிகாரிகளை lateral entry மூலம் மத்தியப்படையில் அதிகாரிகளாக நியமிக்கும் நடைமுறையை கட்டுப்படுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பை செயலிழக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டமானால் உச்சநீதிமன்றம் அதனை ரத்துசெய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
மத்திய படைகளில் திறமையான அதிகாரிகள் உள்ள நிலையில் ஏன் வெளியில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய படை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்? அதிகாரம் எப்போதும் ஒரு கட்சியிடம் இருக்காது, இது ஒரு ஜனநாயக நாடு என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
கூட்டாட்சி என்ற அடிப்படையில் மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தாமல் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் அல்லது தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும்” என்று திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளாா்.
அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக தான் – செ.கு.தமிழரசன் புகழாரம்
