Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

-

- Advertisement -

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா் மோடிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

அக்கடிதத்தில், “சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான மசோதாவை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. ஒன்றிய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தம் தொண்டு நிறுவனங்கள் மீது நேரடி தாக்குதலை ஏற்படுத்துகின்றன. கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிதி ஆதாரங்களை முற்றிலுமாக அழிக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய புதிய சட்டதிருத்த மசோதாவால் கிராமப்புற ஏழைகள், பழங்குடியினா், பின் தங்கிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். சேவைகள், நலத்திட்டங்களை உருவாக்கும் அடிப்படை கட்டமைப்புகளை ஒன்றிய அரசின் மசோதா தகா்த்துவிடும்.

we-r-hiring

இச்சட்டம் அமுலுக்கு வந்தால் ஜனநாயகம், மதச்சாா்பின்மைக்கு பாதிப்பு ஏற்படும். சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களுக்கு நிகராக ஒன்றிய, மாநில அரசுகளால் சேவை செய்ய இயங்காது. கிறிஸ்தவா் அதிகமாக வாழும் தமிழ் நாடு, கேரளா மற்றும் அசாமில் தோ்தல் நடக்க உள்ளதால் தற்போதைக்கு ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது. 5 மாநிலங்களில் தோ்தல் முடிந்த பின்பு ஒன்றிய அரசு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றும் என மக்கள் அஞ்சுகின்றனா்.

மேலும், ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள சட்டத்திருத்தம் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

MUST READ