Homeசெய்திகள்உலகம்ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

-

- Advertisement -

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து வெள்ளிக்கிழமை ஒரு காணொளி மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய  காணொளி மாநாடு நடத்த திட்டம்ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான “முழுக்க முழுக்க தற்காப்புப் பணியில்” (purely defensive mission) பங்களிக்க விரும்பும் நாடுகளுக்காக இந்த மாநாட்டை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

we-r-hiring

​இந்த காணொளி கூட்டத்திற்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ​ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமாக கப்பல்  போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்

MUST READ