Homeசெய்திகள்தமிழ்நாடு"தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

-

- Advertisement -

தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை மாற்றும் அபாயத்தை ஏற்றபடுத்தபோவதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுவரையறை திருத்த மசோதா நாம் முன்கூட்டியே அஞ்சியதை விட மிகவும் ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார். குறிப்பாக, அமித் ஷா கடந்த சில நாட்களாக எந்த மாநிலத்திலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருப்பது இந்த மசோதாவை முன்னெடுக்கப்படுவதற்கான சுட்டுமொழியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 131வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தென்மாநிலங்களை நிரந்தரமாக அரசியல் ரீதியாக பின்தள்ளும் முயற்சி நடைபெறுகிறது என சு. வெங்கடேசன் குற்றம்சாட்டினார். “தமிழ்நாட்டின் மீது நீண்டநாளாக தொங்கிக் கொண்டிருந்த அபாயம் தற்போது நேரடியாக செயல்படுத்தப்பட உள்ளது. இது தென்னிந்திய மாநிலங்களை இந்தியாவுக்குள் ‘காலனி நாடுகள்’ போல மாற்றும் அபாயத்தை உருவாக்குகிறது” என்று அவர் எச்சரித்தார்.

அதேநேரத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவ விகிதம் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் முன்பு அளித்த உறுதிமொழி இந்த மசோதாவில் எங்கும் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கட்சி மௌனம் காக்கிறது என்றும், “கட்சியைப் போலவே மாநில நலனையும் அடகு வைத்து விட்டது” என்று சு. வெங்கடேசன் கடுமையாக சாடினார்.

தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

MUST READ