Homeசெய்திகள்சென்னைகர்பிணி மனைவி கண்ணெதிரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்பு

கர்பிணி மனைவி கண்ணெதிரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்பு

-

- Advertisement -

மனைவி கர்ப்பமாக உள்ளதால் மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பக்கிங்காம் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடல்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்பிணி மனைவி கண்ணேரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்புசென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, குமரகுரு அவென்யூ, 5 வது தெருவில் வசித்து வந்த கார்த்திக்(38) மனைவி, 3 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கார்த்திக் மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் கார்த்திக் அவருடைய மனைவி மற்றும் குழந்தையை TN 10 AB 9174 என்ற எண் கொண்ட ஹூண்டாய் 10 காரில் மனைவிக்கு ஸ்கேன் எடுப்பதற்காக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அக்கரையில் இருந்து ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரை இணைக்கும் கே.கே. சாலையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். மீண்டும் யூ டர்ன் செய்து காரை ஈசிஆர் சாலையை நோக்கி சென்றுள்ளார்.  திடீரென மீண்டும் ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் செல்லும் பிரதான சாலையில் சென்று காரை பக்கிங்காம் கால்வாய்க்கு முன்னதாக இடது புறம் உள்ள மண் சாலையில் சென்று பக்கிங்காம் கால்வாயில் காரை இறக்குவதற்கு முயற்சித்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள துணிந்துள்ளார். அப்பொழுது கார் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் காரில் இருந்த கார்த்திக், அவரது மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையை பாதுகாப்பாக கீழே இறக்கி கே.கே.சாலைக்கு சென்றுள்ளார்.

we-r-hiring

பின்னர் மனைவியிடம் காரை பள்ளத்தில் இருந்து வெளியில் எடுப்பதற்கு உதவிக்கு யாரையாவது அழைத்து வருகிறேன் என்று கூறி சிறிது தூரம் நடந்து சென்ற கார்த்திக் திடீரென பக்கிங்காம் கால்வாய்யின் மேல் இருந்து கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்த மனைவி கத்தி கூச்சலிட்டு அந்த வழியாக சென்றவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். யாரும் உதவ முன் வரவில்லை. வேடிக்கை பார்த்து விட்டு சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் கார்த்திக் மனைவி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நீலாங்கரை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பக்கிங்காம் கால்வாயில் கார்த்திக் உடலை தேடினர். பக்கிங்காம் கால்வாயில் உடல் ஒன்று மிதந்து வந்ததை பார்த்து அப்பகுதிக்கு சென்றவர்கள் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நீலாங்கரை போலீசார் திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு சென்று பக்கிங்காம் கால்வாயில் மிதந்து வந்த உடலை போலீசார் மீட்ட நிலையில் அந்த உடல்  கார்த்திக் என்பது அவரது உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். ஸ்கேன் எடுக்க புறப்படும் போதும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் காா்த்திக் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.

கணவன் மனைவிக்குள் வழக்கமான தகராறு ஏற்பட்ட நிலையில் கர்ப்பிணி மனைவியை மூன்று வயது குழந்தையுடன் தவிக்க விட்டு விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

MUST READ