தமிழ் மக்களின் நல்ல ஆதரவுடன் தமிழ்நாடு வெல்லும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்மாதிரி ஆட்சி மலரும் என தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.


அரியலூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் தனது வாக்கினை பதிவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தாா்.
தமிழ் மக்களின் நல்ல ஆதரவுடன் மகத்தான வெற்றி வெற்றி பெறும் என நம்புகிறேன். 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணி வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்ற கழகம் தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ் மண்ணின் மதவாத அரசியலுக்கும், வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் தீர்ப்பாக எழுதி உள்ளனர்.
ஸ்டாலின் சொன்னது போல இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான யுத்தம் இல்லை, இரண்டு அணிகளுக்கு இடையிலான யுத்தம் இல்லை. இரண்டு கருத்தியலுக்கு எதிரான யுத்தம் இதில் தமிழ்நாடு வெல்லும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்மாதிரி ஆட்சி மலரும் என திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
