பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) மயோனைஸ் தயாரிக்கப்படும் மயோனைஸ்சுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மயோனைஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக ரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் பச்சை முட்டை அடிப்படையிலான மயோனைஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை 2027 ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
