Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதி

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதி

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேவையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதிஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் எதற்கும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், சில இடங்களில் முறைகேடுகள், வன்முறை, வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் சில தரப்பினர் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

we-r-hiring

இதற்கிடையில், ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற மேற்கு வங்கத்தின் முதல்கட்ட தேர்தலிலும் 44,376 வாக்குச்சாவடிகளில் எதற்கும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

 

MUST READ