Homeசெய்திகள்சென்னைமதுரவாயல் அருகே விபத்து - மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி கார்பெண்டர் பலி

மதுரவாயல் அருகே விபத்து – மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி கார்பெண்டர் பலி

-

- Advertisement -

சென்னையில் மதுரவாயல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் அருகே விபத்து - மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி கார்பெண்டர் பலி

we-r-hiring

சென்னை அண்ணா நகர் நடுவங்கரை பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் விக்னேஷ் (24), கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவர் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் தனது பணியை முடித்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மதுரவாயல் அருகிலுள்ள ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் கிருஷ்ணா நகர் சந்திப்பு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

படங்கள் மூலம் வழிகாட்டும் சாலை பலகைகள் – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி..

MUST READ