வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை கருத்தரித்தல் அதிகரிக்க காரணம் என தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் சார்பில் 42ஆவது OGSSICON 2026 என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைத்து நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு, கேரளா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் மகப்பேறு இறப்பு விகிதத்தில் உள்ளது என்றும் உணவுப்பழக்கம் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவைகள்தான் செயற்கை கருத்தரித்தல் அதிகரிக்க காரணம் எனவும் கூறினார்.

மேலும், இதுகுறித்து சம்பத்குமாரி, மீனா( மகப்பேறு மருத்துவர்), “நகர்புறங்களில் பெண்கள் அதிகமானோர் வேலைக்கு செல்வதால் உடற்பயிற்சி இல்லாமல், துரித உணவுகளையே அதிகமாக உட்கொள்கின்றனர். அதனால் உடல்பருமன் அதிகமாகிறது. அதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட காரணமாகிறது. இதனால் முதலில் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும், அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திர பக்தர்களால் திடீரென பரவிய செங்கல் வழிபாடு – கோயில் நிர்வாகம் அதிர்ச்சி
