புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில் முதல்வராக பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு, முதல்வர் ரங்கசாமி புறப்பட்டு சென்றுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐந்தாவது முறையாக முதல்வர் ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அப்பா பைத்தியசாமியின் தீவிர சிஷ்யரான ரங்கசாமி, எது செய்தாலும் அவரிடம் கேட்டு தான் காரியத்தில் ஈடுபடுவார்.
அதே போல் புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எந்த தேதியில் சந்திப்பது? எந்த நாளில் முதலமைச்சராக பதவி ஏற்பது என்பது குறித்து உத்தரவு கேட்பதற்காக முதல்வர் ரங்கசாமி, சேலம் அப்பா பைத்திய சாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தரிசனம் முடித்துவிட்டு பொள்ளாச்சி அழுக்கு சித்தர் கோயில் செல்கிறார்.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு – தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்.

